ஏ ஏ ஐ குறித்து

கடவுள் மறுப்பு (நாத்திகம்), மதசார்பின்மை குறித்தும் இவை தொடர்பான பிற பிரச்சனைகள் குறித்து பொதுமக்களுக்கும் தனது உறுப்பினர்களுக்கும் அர்ப்பணிப்பு உணர்வோடு கர்ப்பிப்பதற்காக தனிநபர்களையும், சுயசிந்தனையாளர் குழுக்களையும், நாத்தீகவாதிகளையும் ஒருங்கிணைக்கும் உலகளாவிய சம்மேளனம் தான் "AAI - Atheist Alliance International" என அழைக்கப்படும் "சர்வதேசிய நாத்திகர் கூட்டமைப்பு"

  • இது நாத்திகம் மற்றும் மதசார்பின்மைக்கான உலகின் உறுதியான குரல்
  • இது உலகம் முழுதும் பரந்து கிடக்கும் நாத்திகர், சுயசிந்தனையாளர்அமைப்புகளுக்கி டையே உள்ள ஒற்றுமையை வலிமைப்படுத்தும்.
  • இது புதிய நாத்தீகவாத, சுயசிந்தனையாளர் அமைப்புகள் குறிப்பாக மூன்றாம் உலகநாடுகளில் அமைப்புகளை உருவாக்க ஆதரவளிக்கும்.
  • இது உலகம் முழுதுள்ள சுயசிந்தனையாளர்கள் மற்றும் நாத்தீகர்களுக்கு எதிரான பாகுபாடுகளை களைய போராடும். நாத்திகம், சுயசிந்தனை, புலனறிவு போன்றவற்றை ஊக்குவிக்கும் நிகழ்ச்சிகள், திட்டங்கள் போன்றவற்றை ஊக்குவிக்கும்.

நோக்கமும் செயலும் (Vision and mission )

பகுத்தறிவை, ஆதாரங்களை, அடிப்படை காரணங்களைக் கொண்ட மற்றும் மதநம்பிக்கைகளின் பாதிப்பற்ற கல்வி, விஞ்ஞானம், பொதுமக்களுக்கான கொள்கைகள் கொண்ட மதச்சார்பற்ற உலகமே எங்களது இலட்சியம்.

கல்வி மற்றும் அதற்கு ஆதரவான திட்டங்களை சர்வதேச அளவில் நடைமுறைப்படுத்துவதும்; நாத்திக மற்றும் சுயசிந்தனையாளர் அமைப்புகளை வளர்ப்பது, அவற்றிற்கிடையே தொடர்புகளை உண்டாக்குவது இவற்றின் மூலமாக உலகளாவிய நாத்திகவாதத்தை வலிமைபடுத்துவதும்; காலங்காலமாய் மூழ்கிக்கிடக்கும் மதநம்பிக்கைகளை எதிர்கொள்வதும் அதில் சவால்களை சந்திப்பதும் AAIஇன் செயல் திட்டமாகும்.

கல்வி

கல்விதான் AAI இன் பிரதான அணுகுமுறை AAI இன் உறப்பினர்களும் பொதுமக்களும் புத்தறிவு பெற கீழ்க்கண்ட நடமுறைக்களுக்கு ஆதரவளிக்கிறது.

  • AAI இன் வலைத்தளம் மற்றும் சமுக ஊடகங்கள் மூலமாக நாத்திகம்/மதசார்பற்ற கொள்கைகளை பிரச்சாரம் செய்வது; அவை குறித்த செய்திகளை தொடர்ந்து வெளியிடுவது.
  • "மதசார்பற்ற உலகம்" (Secular World) என்ற பத்திரிக்கையையும் இமேஜின் (Imagine) என்ற காலந்திர இதழையும் வெளியிடுவது.
  • உலகம் முழுவதும் ஆங்காங்கே உள்ள குழுக்கள் மூலமாக நாத்தீகவாத மாநாடுகளை நடத்துவது அதன் மூலம் அனுபவம் மிக்க பேச்சாளர்களின் உரையை கேட்டறியும் வாய்ப்பை குறிப்பாக வளர்ந்து வரும் நாட்டுமக்களுக்கு கிடைக்கச்செய்வது.
  • உகாண்டா நாட்டிலுள்ள "கசேசே மனிதநேய துவக்க பள்ளி" போன்ற திட்டங்களுக்கு ஆதரவு அளிப்பது.

ஒலிக்கும் குரல் (Advocacy)

மனிதனாக இருப்பதன் அர்த்தமே அடிப்படை உரிமைகளையும்; நீதி, சமூகப்பொருப்பு போன்றவற்றை அடிப்படையாகக்கொண்டது. பிற குழுக்களோடு நல்ல இணக்கத்தை உருவாக்கிக்கொண்டு அநீதிகளையும் பிரச்சனைகளையும் அரசு மற்றும் ஊடகங்களின் கவனத்திற்கு கொண்டுவருவது;கொள்கை அறிக்கைகளை மேம்படுத்துவது; உரிய பிரச்சனைகள் மீதான கருத்துகளை அவ்வபோது வெளியிடுவது; அவற்றை பத்திரிகைகளுக்கு செய்தியாக விநியோகிப்பது போன்றவை மூலமாக நாத்திகவாதிகள் மற்றும் ஒத்த கருத்துடையவர்களை பாதுகாக்கும் பணியை AAI செய்யும்.

சமூக கட்டுமானம் (Community Buildings)

AAI  மற்ற சமூக அமைப்புகளின் பண்புகளை அங்கீகரிக்கும், அத்துடன் குழுக்கள், குடும்பங்கள், தனிநபர்களுக்கு பாதுகாப்பு அரணாக AAI விளங்கும். உலகம் முழுதும் புதிய நாதீகவாத அமைப்புகளை உருவாக ஊக்குவிக்கும். அவற்றை வளர்க்க உதவும். இது தவிர சர்வதேச அளவில் சென்றடையும் முழுமையான நாத்திக பிரச்சாரம் போன்ற சமூககட்டமைப்புத் திட்டங்களுக்கு AAI உதவிடும். இத்திட்டங்கள் நாத்திகர்கள் மீதான பாகுபாடு, எதிர்வினைகளை எதிர்பதற்கும்; புதிய சமூகங்கள் தங்களை நிலைநிறுத்திக் கொள்வதற்கும்; நாத்தீக சமூகத்தின் பொது விழிப்புணர்வு சிந்தனைகளை வளர்க்கவும் பயன்படும். AAI அமைப்பு மூலமாக இம்மாதிரியான நடவடிக்கைகள் ஏற்கனவே நடைபெற்று வருகின்றன. AAI தன்னார்வளர்களின் சர்வதேச இயக்குனர்கள் வாரியத்தால் நடத்தப்படுகிறது.உறுப்பினர் கட்டணம் மற்றும் நன்கொடையை நம்பியே இருக்கிறது. எனவே நாத்திகத்தையும் மதசார்பின்மையையும் ஆதரிக்கும் நீங்கள் எங்களோடு இணையுங்கள்.

வரலாறு (History) 

AAI (சர்வதேசிய நாத்திகர் கூட்டமைப்பு) அமெரிக்காவில் 1991ல் AA (நாத்திகர்கள் கூட்டமைப்பு) என்ற பெயரில் உருவானது. அமெரிக்காவிலுள்ள கீழ்க்கண்ட நாத்திக அமைப்புகள் ஒன்று சேர்ந்து அதை உருவாக்கின.

  1. நாத்திகர்கள் ஐக்கியம் (லாஸ் ஏஞ்சலிஸ், கலிஃபோர்னியா)
  2. நாத்திகர்கள் கூட்டணி (சாண்டியாகோ, கலிஃபோர்னியா)
  3. சான்ஃபிரான்சிஸ்கோ பிராந்திய நாத்திகர்கள் (கலிஃபோர்னியா)
  4. நாத்திகர்கள் கூட்டமைப்பு (ஹவுஸ்டன், டெக்ஸாஸ்)
  • AA குறுகிய காலத்திலேயே கூடுதலாக பல அமைப்புகளை தன்னுள் இணைத்துகொண்டது. ஓராண்டுக்குள்ளாக அதில் 8 அமெரிக்க அமைப்புகள் உறுப்பினர் ஆயின.
  • 1992 இறுதிக்குள் சர்வதேச அளவிலான அமைப்புகள் உறுப்பினராயின.
  • 1994 ஆண்டின் பின்பகுதியில் AA தனது மதசார்பற்ற தேசம் (Secular Nation) என்ற பத்திரிக்கையை வெளியிட்டது
  • 1995இல் அமெரிக்காவிலுள்ள லாஸ் ஏஞ்சலிஸில் தனது முதலாவது மாநாட்டை AA நடத்தியது.
  • 1997இல் AA இன் இணையத்தளம் துவங்கப்பட்டது.
  • 2001இல் அமெரிக்காவிற்கு வெளியே உள்ள ஆறு அமைப்புகள் இணைந்தன. எனவே இவ்வமைப்பின் பெயர் AAI (சர்வதேசிய நாத்திகர் கூட்டமைப்பு) என மாற்றப்பட்டது.
  • 2006இல் AAI இன் முதல் சர்வதேச மாநாடு ஐஸ்லாந்து நாட்டில் ரெயிக்ஜாவிக் நகரில் நடைபெற்றது.
  • 2010இல் உலகளாவிய நாத்திகர்கள் மாநாடு ஆஸ்திரேலியா நாட்டு விக்டோரியா மாநிலத்தின் மெல்போர்னில் நடத்தப்பட்டது
  • 2010இல் அமெரிக்க சார்ந்த செயல்களை உலகளாவிய செயல்களிலிருந்து பிரித்துக்கொள்வதன் மூலமாக தனது இலக்கை எளிதாக எட்டமுடியும் என AAI உறுதிகொண்டது. எனவே அமெரிக்க நாத்திகர்கள் கூட்டணி என்ற அமைப்பு தனியாக உருவாக்கப்பட்டு அது AAI இன் ஒரு இணைப்பு அமைப்பாக இப்போது செயல்பட்டுவருகிறது.

AAI இன் மாண்புகள் (AAI's Values)

  1. பகுத்தறிவு சிந்தனையும், காரணங்களும் (Reason and rational thoughts)
    தர்க்க ரீதியான முடிவுகளை எட்டுவதற்கும், மனித இனம் சந்தித்துவரும் பிரச்சனைகளைத் தீர்பதற்க்கும் தேவையான அடிப்படை அம்சங்கள், பகுத்தறிவு சிந்தனையும், காரணகாரியங்களையும் ஆய்வுசெய்தலுமே ஆகும்.
  2. விஞ்ஞானம்/புலனறிவு (science/empiricism)
    உலகைப்புரிந்து கொள்வதற்கும் உண்மையைக் கண்டறிவதற்கும் நல்ல வழி விஞ்ஞான ரீதியில் அணுகுவதுதான். புதிய தடயங்களை நாம் அறியும் பொது நம்மிடம் ஏற்கனவே பொதிந்துள்ள முடிவுகளை மாற்றிக்கொள்ள வேண்டும். நமக்கு கிடைக்கும் தடயங்களை வைத்துதான் எந்த ஒரு முடிவிற்கும் வர வேண்டும்.
  3. கருணை (Compassion)
    மனிதர்களின் கருணைக்கும் பிறர் நலம் பேணும் பண்புக்கும் அடிப்படையானது எல்லா மக்களுக்கும் பலனளிக்கும் கூட்டுறவு சமுக கட்டமைப்புதான்.
  4. நோக்கம் (Purpose)
    நாம் வாழும் வாழ்கையை பிறருக்கு உதவுதான் மூலமாகத்தான் அர்த்தமுள்ளதாக ஆக்கி கொள்ள வேண்டும்.
  5. சுதந்திரம் (Freedom)
    இனம், மொழி, ஆண், பெண், உடல் ஊணம் போன்ற பாகுபாடுகள் எதுவுமற்ற சுதந்திரம் எல்லா மக்களுக்கும் உரியது. மனதிற்கும், சிந்தனைக்கும் உரிய சுதந்திரமும் எல்லா மக்களுக்கும் உரியதே. எனவே AAI சர்வதேச மனித உரிமை மாநாடுகள் கூறிய மாண்புகளுக்கேற்ப வாழ்வதை ஆதரிக்கும்.
  6. பொறுப்பு (Responsibility)
    நாம் வாழும் பூவுலகை பாதுகாத்திட மனிதர்களிடத்தும் விலங்குகளிடத்தும் மனிதநேய தொடர்புகளை பெருக்கிக்கொள்வதும், இந்த உலக சமூகத்தில் வாழும் ஒவ்வொரு மனிதனின் பொறுப்பாகும்.0
 

Community Network

GuideStar" Atheist Nexus UN Commission for Human Rights Richard Dawkins Foundation UN High Commissioner for Refugees African Commission on Human and People's Rights
African Commission
on Human and
People's Rights